/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முதல்வர் அறிவித்தும் நடவடிக்கை இல்லை விக்கிரவாண்டியில் டி.எஸ்.பி., அலுவலகம் திறப்பு எப்போது? முதல்வர் அறிவித்தும் நடவடிக்கை இல்லை விக்கிரவாண்டியில் டி.எஸ்.பி., அலுவலகம் திறப்பு எப்போது?
முதல்வர் அறிவித்தும் நடவடிக்கை இல்லை விக்கிரவாண்டியில் டி.எஸ்.பி., அலுவலகம் திறப்பு எப்போது?
முதல்வர் அறிவித்தும் நடவடிக்கை இல்லை விக்கிரவாண்டியில் டி.எஸ்.பி., அலுவலகம் திறப்பு எப்போது?
முதல்வர் அறிவித்தும் நடவடிக்கை இல்லை விக்கிரவாண்டியில் டி.எஸ்.பி., அலுவலகம் திறப்பு எப்போது?
ADDED : ஜூன் 04, 2024 05:26 AM
விக்கிரவாண்டியில், சட்டசபையில் முதல்வர் அறிவித்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னமும் டி.எஸ்.பி., அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது.
கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளைத் தீர்க்க முதல்வர் ஸ்டாலின், தொகுதி எம்.எல்.ஏ.,க்களை தொகுதியில் உள்ள கோரிக்கைகளை மனுவாக அளிக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., மறைந்த புகழேந்தி, விக்கிரவாண்டியில் புதிதாக டி.எஸ்.பி., அலுவலகம், மகளிர் காவல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதன் அடிப்படையில் காவல்துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், விக்கிரவாண்டியில் புதிதாக டி.எஸ்.பி., அலுவலகம் திறக்கப்படும் என அறிவித்தார்.
முதல்வர் அறிவித்ததன் பேரில் எஸ்.பி., அலுவலகத்திலிருந்து விக்கிரவாண்டியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட விழுப்புரம் டி.எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள விக்கிரவாண்டி ,பெரியதச்சூர், கண்டமங்கலம், வளவனுார், செஞ்சி டி.எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டில் செயல்படும் கஞ்சனுார், கெடார் மற்றும் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் நிலையங்களைப் பிரித்து தனியாக டி.எஸ்.பி., அலுவலகம் திறக்க முதல்வர் பார்வைக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது.
முதல்வர் அறிவித்த இரண்டு மாத காலத்திற்கு காவல் துறையினர் இதற்காக சுறு சுறுப்பாக செயல்பட்டு, டி.எஸ்.பி., அலுவலகத்தினை விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் அல்லது பனையபுரம் ஒன்றிய அலுவலக சமுதாய கூடத்தில் செயல்படுத்தலாம் என்ற முடிவில் இருந்தனர்.
ஆனால், அதற்கு அடுத்து வந்த அரசின் மகளிர் உரிமை தொகை, கல்லுாரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட செயல்பாடு போன்ற திட்டங்களுக்கு நிதி அதிகம் தேவைப்பட்டதால், நிதி பற்றாக்குறையால் புதிய டி.எஸ்.பி., அலுவலகம் திறப்பு அறிவிப்பு கடந்த 14 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய டி.எஸ்.பி., அலுவலக பணி குறித்து, மாவட்ட அமைச்சர், மாவட்ட நிர்வாகத்தினர், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய டி.எஸ்.பி., அலுவலகத்தினை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.