/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நீட் எதிர்ப்பு இந்திய அளவில் வலுக்கிறது அமைச்சர் பொன்முடி பேட்டி நீட் எதிர்ப்பு இந்திய அளவில் வலுக்கிறது அமைச்சர் பொன்முடி பேட்டி
நீட் எதிர்ப்பு இந்திய அளவில் வலுக்கிறது அமைச்சர் பொன்முடி பேட்டி
நீட் எதிர்ப்பு இந்திய அளவில் வலுக்கிறது அமைச்சர் பொன்முடி பேட்டி
நீட் எதிர்ப்பு இந்திய அளவில் வலுக்கிறது அமைச்சர் பொன்முடி பேட்டி
ADDED : ஜூலை 20, 2024 04:25 AM
விழுப்புரம்: 'நீட்தேர்வு வேண்டும் எனக்கூறும் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் தான், பா.ம.க., வினர் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தனர்' என அமைச்சர் பொன்முடி விமர்சித்தார்.
விழுப்புரத்தில் தமிழக அரசு சார்பில், ரூ.9.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தியாகி கோவிந்தசாமி நினைவிடம் மற்றும் இடஇதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டுமானப் பணிகளை, அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தபடி விழுப்புரத்தில் தியாகி கோவிந்தசாமிக்கு நினைவிடமும், 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபமும் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி முடியும் தருவாயில் உள்ளது.
வரும் ஆகஸ்ட் 8ம் தேதி மணிமண்டபத்தில் கோவிந்தசாமியின் சிலை நிறுவப்பட உள்ளது.
அதன் பிறகு, முதல்வர் ஸ்டாலின், மணி மண்டபத்தை திறந்து வைப்பார். சமூக நீதிக்காக முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையில், விழுப்புரம் மாவட்ட மக்களின் மனதில் இடம் பெற்று, வரலாற்றை எடுத்துச் சொல்லும் வகையில், இந்த மணி மண்டபம் அமைந்துள்ளது.
நீட் தேர்வு வேண்டும் எனக் கூறி வரும் பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன் தான், நீட் தேர்வு கூடாது என கூறிவரும் பா.ம.க., வினர் கூட்டணி வைத்து, தேர்தலை சந்தித்தனர்.
தமிழகத்தில் கொள்கை அடிப்படையில் தொடங்கிய நீட் தேர்வுக்கான எதிர்ப்பு, இன்று இந்திய அளவில் வலுத்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடு குறித்து, உச்ச நீதிமன்றமும் கண்டித்துள்ளது. நீட் தேர்வு மோசடியால், இந்திய மக்களின் உள்ளங்களில் எதிர்ப்பு பரவியுள்ளது என்றார்.