/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின் கம்பியில் மரம் விழுந்து மின்சாதன பொருட்கள் சேதம் மின் கம்பியில் மரம் விழுந்து மின்சாதன பொருட்கள் சேதம்
மின் கம்பியில் மரம் விழுந்து மின்சாதன பொருட்கள் சேதம்
மின் கம்பியில் மரம் விழுந்து மின்சாதன பொருட்கள் சேதம்
மின் கம்பியில் மரம் விழுந்து மின்சாதன பொருட்கள் சேதம்
ADDED : ஜூலை 20, 2024 04:28 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மின் கம்பி மீது, மரம் முறிந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் சாதன பொருட்கள் சேதமானது.
விழுப்புரத்தில் நேற்று மாலை 7:00 மணிக்கு திடீரென சூறைக்காற்று வீசியது. அதில், மாம்பழப்பட்டு ரோடு, இந்திரா நகர் மெயின் ரோட்டில் ஒரு வீட்டில் இருந்த ப்பாளி மரம் முறிந்து அருகே சென்ற உயரழுத்த மின்கம்பி மீது விழுந்து, தப்பபொறி ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் அதிக மின்னழுத்தம் ஏற்பட்டதில், அப்பகுதியில் ரமேஷ், குணசேகர், சபரீசன் உள்ளிட்ட 10 பேரின் வீடுகளில் இருந்த 'டிவி', வாஷிங் மெஷின், பிரிட்ஜ், கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. மேலும், அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
தகவலறிந்த மின் ஊழியர்கள் விரைந்து சென்று சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.