/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தேசிய மருத்துவர் தினம் மரக்கன்று நடும் விழா தேசிய மருத்துவர் தினம் மரக்கன்று நடும் விழா
தேசிய மருத்துவர் தினம் மரக்கன்று நடும் விழா
தேசிய மருத்துவர் தினம் மரக்கன்று நடும் விழா
தேசிய மருத்துவர் தினம் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூலை 02, 2024 05:55 AM

செஞ்சி: அனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களை கவுரவிப்பது மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். டாக்டர் ராமனுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர் கிருபா, சுகாதார ஆய்வாளர்கள் சண்முகம். இளங்கோ மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.