ADDED : ஜூன் 05, 2024 03:18 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தாயை காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
சுந்தரிபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி வளர்மதி, 45; இவர், நேற்று முன்தினம் அன்னியூர் அடுத்த செம்மேடு கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மகன் ஸ்ரீநாத் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.