/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பள்ளி கல்வித்துறை அமைச்சு பணியாளர் நலச்சங்க கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சு பணியாளர் நலச்சங்க கூட்டம்
பள்ளி கல்வித்துறை அமைச்சு பணியாளர் நலச்சங்க கூட்டம்
பள்ளி கல்வித்துறை அமைச்சு பணியாளர் நலச்சங்க கூட்டம்
பள்ளி கல்வித்துறை அமைச்சு பணியாளர் நலச்சங்க கூட்டம்
ADDED : ஜூன் 19, 2024 01:10 AM

விழுப்புரம் ; தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் நலச் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை, தொடக்கக் கல்வித் துறையில் விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் 176 இளநிலை உதவியாளர்கள் சார்பில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் நலச்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் மாதாந்திர கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யும் ஆலோசனை பொதுக்கூட்டம் நடந்தது.
விழுப்புரம், வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்தில், நிர்வாகிகள், இளநிலை உதவியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி உதவியாளர் நியமனத்தை நிறுத்தி விட்டு, பதவி உயர்வு கோரி காத்திருக்கும் தட்டச்சர், இளநிலை உதவியாளர்களுக்கு, உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்படும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தும் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வின் போது 2 சதவீதம் அடிப்படையில் பணியிடங்களை கணக்கிட்டு அமைச்சு பணியாளர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிமாறுதலில் செல்ல இணையதள கலந்தாய்வு நடத்த வேண்டும்.
நிறுத்தி வைத்த ஈட்டிய விடுப்பு சரண் முறையை மீண்டும் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, புதிய சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், மாவட்ட தலைவராக உதயகுமார், துணைத் தலைவராக பாரதிராஜா, செயலாளராக ராமமூர்த்தி, துணைச் செயலாளராக ருக்குமணி, பொருளாளராக வினோத்குமார், அமைப்பு செயலாளராக சித்ரா உட்பட நிர்வாகிகள் பலர் தேர்வு செய்யப்பட்டனர்.