/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 19, 2024 01:11 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் சி.ஐ.டி.யூ., மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் மின்வாரிய தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க சிறப்பு தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கன்னியப்பன், முருகானந்தம், ஏழுமலை, ராஜா, செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி, திட்ட செயலாளர் சேகர், பொருளாளர் ஏழுமலை, அருள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், மின்துறை கணக்கீட்டு பிரிவில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மொபைல் போன் மூலம் கணக்கீட்டு பணி செய்திட அதற்குரிய சாதனங்களை வழங்க வேண்டும்.
பல ஆண்டுக்கு முன் வழங்கிய கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களை புதிதாக அமைக்க வேண்டும். கணக்கீட்டு பிரிவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை வழங்க வேண்டும். ஏ.டி.ஓ., பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.