/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கொசப்பாளையத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு கொசப்பாளையத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு
கொசப்பாளையத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு
கொசப்பாளையத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு
கொசப்பாளையத்தில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 18, 2024 05:13 AM

விக்கிரவாண்டி: ''தமிழகத்தில் 37 சதவிகிதம் வன்னியர்கள் உள்ளனர் .ஆனால் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு அளித்து அதற்குள் அவர்களை ஒடுக்க பார்க்கின்றனர் '' என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் , காணை வடக்கு ஒன்றியம் கொசப்பாளையத்தில் நடந்த தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்திற்கு தேர்தல் பணிக்குழு தலைவர் அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசும் போது, 'இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற ஒவ்வொருவரும் திண்ணை பிரச்சாரம் செய்யவேண்டும் .
தமிழகத்தில் 37 சதவிகிதம் வன்னியர்கள் உள்ளனர் .ஆனால் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு அளித்து அதற்குள் அவர்களை ஒடுக்க பார்க்கின்றனர் . எனக்கு இத் தொகுதியில் 7 வாக்கு சாவடிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது .அதில் முகவர்களாக உள்ளவர்கள் யார் அதிக ஓட்டு வாங்கி தருகிறார்களோ அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தங்க சங்கிலி பெற்று தருவேன்' என்ற அமைச்சர் வேலு பேசினார் .
கூட்டத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி,அமைச்சர் சக்கரபாணி, ரவிக்குமார் எம்.பி., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மா.கம்யூ.,முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி,சி.பி.ஐ., மாநில குழு சரவணன்உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.