/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தது தி.மு.க., ஆட்சியில்தான் அமைச்சர் வேலு பேச்சு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தது தி.மு.க., ஆட்சியில்தான் அமைச்சர் வேலு பேச்சு
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தது தி.மு.க., ஆட்சியில்தான் அமைச்சர் வேலு பேச்சு
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தது தி.மு.க., ஆட்சியில்தான் அமைச்சர் வேலு பேச்சு
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தது தி.மு.க., ஆட்சியில்தான் அமைச்சர் வேலு பேச்சு
ADDED : ஜூலை 02, 2024 11:28 PM

விக்கிரவாண்டி : 'தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சியில்தான் வன்னியர்களுக்கு அதிகளவு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது' என அமைச்சர் வேலு பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதியில், கடையம், கருவாச்சி, புது கருவாச்சி, சி.என்.பாளையம், வெள்ளையாம்பட்டு ஆகிய இடங்களில் தி.மு.க.,வேட்பாளர் சிவாவை ஆதரித்து அமைச்சர் வேலு பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில்தான் வன்னியர்களுக்கு அதிகளவு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் துரைமுருகன், பன்னீர்செல்வம், சிவசங்கர், எம்.பி.,களில் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், மணி, தரணி வேந்தன் இவர்களெல்லாம் வன்னியர்கள்தான். இது 20 சதவீதத்துக்கு கூடுதலாக ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.
புது கருவாட்சியில் கடந்த 3 ஆண்டு ஆட்சியில் 1.18 கோடி ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, களம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஒருவருடைய குடும்பத்தினுடைய பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக, ஆட்சிக்கு வந்ததும், மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து தி.மு.க., ஆட்சி செய்யும். இல்லாவிட்டால் எங்கள் பங்காளி அ.தி.மு.க., ஆட்சி செய்யும். இருவரைத் தவிர தமிழ்நாட்டில் பா.ஜ., கோலுான்ற முடியாது.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., இருந்தால் தான் இப்பகுதியில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க முடியும். தேர்தலில் வேட்பாளர் சிவாவுக்கு ஓட்டளித்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அமைச்சர் வேலு பேசினார்.
மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, பொருளாளர் ஜனகராஜ், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், அம்பேத்குமார், சரவணன், ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, செயலாளர்கள், முருகன், ராஜா, முருகன், திருவண்ணாமலை மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் சுப்ரமணி, சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.