ADDED : ஜூலை 02, 2024 11:28 PM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 7 கூரை வீடுகள் எரிந்து நாசமானது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.பணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 40; கூலித்தொழிலாளி. நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் இவரது கூரை வீடு திடீரென தீ பிடித்து எரிந்தது.
காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி அருகில் இருந்த பாவாடை, துரை, பாலகிருஷ்ணன், அன்பழகன், சத்தியராஜ், ஆனந்தராஜ் ஆகியோரது வீடுகளுக்கும் பரவியது.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். விபத்தில் 7 வீடுகளிலும் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார், தீ விபத்துக்கான காணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.