Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பா.ம.க., வேட்பாளர் டிபாசிட் இழக்கும் அளவிற்கு தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் அமைச்சர் பொன்முடி பேச்சு

பா.ம.க., வேட்பாளர் டிபாசிட் இழக்கும் அளவிற்கு தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் அமைச்சர் பொன்முடி பேச்சு

பா.ம.க., வேட்பாளர் டிபாசிட் இழக்கும் அளவிற்கு தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் அமைச்சர் பொன்முடி பேச்சு

பா.ம.க., வேட்பாளர் டிபாசிட் இழக்கும் அளவிற்கு தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் அமைச்சர் பொன்முடி பேச்சு

ADDED : ஜூன் 19, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.

விக்கிரவாண்டி மத்திய ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கவுதம சிகாமணி வரவேற்றார். தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவை அறிமுகம் செய்து வைத்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது;

தமிழக முதல்வர் ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதி இடை தேர்தலுக்கு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்துள்ளார். இத் தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் டிபாசிட் இழக்கும் அளவிற்கு லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.

ஜெகத்ரட்சகன் எம்.பி., பேசியதாவது;

இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 3 லட்சம் நிதி வழங்கியதோடு, அந்த குடும்பத்தினர் மாதந்தோறும் உதவித் தொகை பெறுவதற்கும் வழிவகை செய்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி. முந்தைய ஆட்சியில் அவசரகதியில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அள்ளித் தெளித்துச் சென்றுவிட்டார்கள். முதல்வர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்' என்றார்.

அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:

மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்றியவர் முதல்வர் ஸ்டாலின். அதனால் தான் லோக்சபா தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. சிலர் தேர்தல் வந்தால் இடஒதுக்கீடு என்பார்கள். சமூகத்துக்கு உரிமை என்று ஆரம்பிப்பார்கள். தேர்தல் முடிந்தால் காணாமல் போய்விடுவார்கள்' என்றார்.

கூட்டத்தில், ரவிக்குமார் எம்.பி., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணை சேர்மன் ஷீலா தேவி சேரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.கள் புஷ்பராஜ், ராமமூர்த்தி, மாவட்டச் செயலர்கள் சவுரிராஜன், சுப்பிரமணியன் வி.சி., மேலிடப் பொறுப்பாளர் குணவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெயபால் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us