/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கடலோர பாதுகாப்பு 'சாகர் கவாச்' ஒத்திகை கடலோர பாதுகாப்பு 'சாகர் கவாச்' ஒத்திகை
கடலோர பாதுகாப்பு 'சாகர் கவாச்' ஒத்திகை
கடலோர பாதுகாப்பு 'சாகர் கவாச்' ஒத்திகை
கடலோர பாதுகாப்பு 'சாகர் கவாச்' ஒத்திகை
ADDED : ஜூன் 19, 2024 11:13 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதற்கான 'சாகர் கவாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் 'சாகர் கவாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகை காவல் துறை சார்பில் நடப்பது வழக்கம்.
இந்த ஒத்திகை, விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறை சார்பில், கடலோர பகுதிகளான கோட்டக்குப்பம், ஆரோவில், மரக்காணம் பகுதிகளில் ஆண்டுதோறும் நடக்கிறது. தமிழக கடற்படை, கடலோர காவல் படை, தமிழக கடலோர பகுதி போலீசார் பங்கேற்பர்.
தமிழக கடற்பகுதிகளில் பல குழுக்களாக பிரிந்து தீவிரவாத தாக்குதலை முறியடிக்கும் நிகழ்வு நடைபெறும். இதில், தீவிரவாத அமைப்பு போன்ற சில குழுக்களாகவும், போலீசாரே தேடுதல் பணியில் சில குழுக்களாகவும் பிரிந்து செயல்படுவர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி, எஸ்.பி., தீபக் சிவாச் மேற்பார்வையில் நடந்தது. ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமையில், டி.எஸ்.பி., சுனில் மற்றும் 200 போலீசார், ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ஒத்திகை நிகழ்ச்சி, கடலோர எல்லை பகுதிகளான மரக்காணம், கூனிமேடு, எக்கியார்குப்பம், மண்டவாய் புதுக்குப்பம், கோட்டக்குப்பம், முட்டுக்காடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடக்கிறது. இன்று (20ம் தேதி) சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி முடிவடைகிறது.