ADDED : மார் 15, 2025 06:39 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண் மீது, பைக்கால் மோதி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தைச் சேர்ந்தவர் பழனிவேல், 43; லாரி உரிமையாளர். இவர், தனது டாரஸ் லாரியை, ஜானகிபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைத்துவிட்டு, ஒரு மாத காலமாக எடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால், நேற்று முன்தினம், பெட்ரோல் பங்க் மேலாளரான வழுதரெட்டியைச் சேர்ந்த தனலட்சுமி, 39; லாரியை எடுத்துச்செல்லும்படி பழனிவேலிடம் கூறியுள்ளார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. பின், தனலட்சுமி தனது ஸ்கூட்டரில் புறப்பட்டபோது, தனது பைக்கை எடுத்த பழனிவேல், ஸ்கூட்டர் மீது மோதி தனலட்சுமியை திட்டி, மிரட்டினார்.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, பழனிவேலை கைது செய்தனர்.