/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 12, 2024 06:27 AM

விழுப்புரம்: விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் 123 பேர், மாநில அளவிலான விளையாட்டு போட்டி மற்றும் தடகள போட்டிகளில் பங்கேற்றனர்.
இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஷர்மிளா, அஸ்விந்திரன், தினேஷ் ஆகியோர், தேசிய அளவிலான 'ரக்பி' போட்டியில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்றனர். இதே பள்ளி மாணவர் அருள் செல்வம், ஜூடோ போட்டியில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்.
மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளி செயலாளர் ஜனார்த்தனன் பாராட்டினார். உடற்கல்வி இயக்குனர் தமிழ்மணி மற்றும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.