ADDED : ஜூலை 12, 2024 06:26 AM

திண்டிவனம்: பா.ஜ., மாநில தலைவரை கண்டித்து, திண்டிவனத்தில் நகர காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நகர தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார்.
காங்., நிர்வாகிகள் ராமமூர்த்தி, தட்சணாமூர்த்தி, வெங்கட், அஜீஸ், ஜெய்கணேஷ், பொன்ராஜா, ரகமத்துல்லா, தோமினிக் சேவியர், குமார், நாராயணசாமி, கலியமூர்த்தி, தங்கமணி, பூமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகையை இழிவாக பேசிய, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன உரையாற்றினர்.