/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஜூன் 19, 2024 01:15 AM

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி தொகுதி காணை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி வரவேற்றார்.
கூட்டத்தில் வேட்பாளர் சிவாவை அறிமுகம் செய்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிவா, அனைத்து அமைச்சர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். இத்தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவார்.
கடந்த லோக்சபா தேர்தலில் டிபாசிட் இழந்ததைப் போல இந்த இடைத்தேர்தலிலும் பா.ம.க., டிபாசிட் இழக்கும் அளவுக்கு லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.
அமைச்சர் மகேஷ் பேசுகையில், 'தேர்தல் பிரசாரத்தின் போது வீதி வீதியாக வந்து இப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களாக பெற்று அதை நிறைவேற்றி தருவது என் முதல் பணியாக இருக்கும்.
எம்.எல்.ஏ.,வாக இருந்த புகழேந்தி சட்டசபை கூடும் போதெல்லாம் ஒவ்வொரு அமைச்சரையும் சந்தித்து தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர கூறுவார். அவரைப் போலவும் சிவாவும் தொடர்ந்து செயல்படுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ரவிக்குமார் எம்.பி., லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், இளந்திரையன் ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, துணைச் சேர்மன் வீரராகவன், மாவட்ட கவுன்சிலர் சிவகுமார், கம்யூ., மாவட்ட செயலாளர்கள் சுப்ரமணியன், சவுரிராஜன், வி.சி., மாவட்ட செயலாளர் பெரியார், இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி கூறினார்.