Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வேகத்தடைகளில் வெள்ளைக் கோடு இல்லாததால் தொடரும் விபத்துகள்

வேகத்தடைகளில் வெள்ளைக் கோடு இல்லாததால் தொடரும் விபத்துகள்

வேகத்தடைகளில் வெள்ளைக் கோடு இல்லாததால் தொடரும் விபத்துகள்

வேகத்தடைகளில் வெள்ளைக் கோடு இல்லாததால் தொடரும் விபத்துகள்

ADDED : ஜூன் 19, 2024 01:16 AM


Google News
Latest Tamil News
செஞ்சி : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலைகளில் அமைத்துள்ள வேகத்தடைகளில் பல இடங்களில் வெள்ளைக்கோடு இல்லாததால் விபத்துகள் நடந்து வருகின்றன.

சாலை விபத்துக்களை தவிர்க்க சாலைகளை பராமரிப்பதும், மேம்படுத்துவதும் அவசியமாகும். வாகன ஓட்டிகள் எதையும் முன்னெச்சரிக்கையாக தெரிந்து கொள்ள போக்குவரத்து சிக்னல்கள், அறிவிப்புகள், ரிப்ளக்டர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை ஒழுங்காக வைக்க வில்லை எனில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

சாலை போடுவதோடு கடமை முடிந்து விட்டதாக கருதாமல் தொடர்ந்து பராமரிக்க மத்திய மாநில அரசுகள் சாலைகளுக்கு அதிக நிதியை ஒதுக்குகின்றன.

தமிழகத்தில் சாலைகளை பராமரிக்க நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்தனை இருந்தும் விழுப்புரம் மாவட்டத்தில் சாலைகளை பராமரிப்பில் மாநில நெடுஞ்சாலைத்துறையும், மத்திய அரசும் சுணக்கமாகவே உள்ளன.

சாலைகளை போடும் கான்ட்ராக்டர்கள் சரியாக வேலைகளை முடிக்காமல் அறைகுறையாக முடித்து விட்டு, அதிகாரிகள் துணையோடு பணத்தை பெற்றுக் கொண்டு சென்று விடுகின்றனர்.

இது போல் அறைகுறையாக வெள்ளைக் கோடுகளே, எச்சரிக்கை ரிப்ளட்டர்களே அடிக்காமல் விட்டதால் சில மாதம் முன் செஞ்சியை அடுத்த கப்பை கிராமம் அருகே ஆட்டோ கிணற்றில் விழுந்து சிறுவன் இறந்தான்.

விபத்து நடந்த அன்று அவசர, அவசரமாக பெயிண்ட்டை அடித்து விசாரணையில் இருந்து அரசுத் துறையினர் தங்களை காப்பாற்றி கொண்டனர்.

இதே போல் மாவட்டம் முழுவதும் ஏராளமான சாலைகளில் பள்ளி, கூட்டு சாலைகள், மருத்துவமனை, திருப்பங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். பல இடங்களில் அடித்த வெள்ளைக் கோடுகள் தற்போது மறைந்து விட்டன.

இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் ஏராளமான விபத்துக்கள் நடந்து வருகின்றன.

இரண்டு மாதம் முன் செஞ்சியில் இருந்து நல்லாண்பிள்ளை பெற்றாள் செல்லும் சாலையில் வெள்ளை நிற கோடு போடப்படாததால் வேகத்தடையில் சிக்கி பைக் கவிழ்ந்தது. அந்த பைக் மீது டிராக்டர் மோதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் இறந்தார்.

எனவே, மாவட்டத்தில் உள்ள சாலைகளை நெடுஞ்சாலைத்துறை, கிராம சாலைகள் திட்டம் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us