/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போக்குவரத்து காவல் துறைக்கு பேரி கார்டுகள் வழங்கல் போக்குவரத்து காவல் துறைக்கு பேரி கார்டுகள் வழங்கல்
போக்குவரத்து காவல் துறைக்கு பேரி கார்டுகள் வழங்கல்
போக்குவரத்து காவல் துறைக்கு பேரி கார்டுகள் வழங்கல்
போக்குவரத்து காவல் துறைக்கு பேரி கார்டுகள் வழங்கல்
ADDED : ஜூன் 08, 2024 05:52 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு போக்குவரத்து போலீசாருக்கு பேரி கார்டு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, டி.எஸ்.பி., சுரேஷ் தலைமை தாங்கினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வரவேற்றார்.
புதுச்சேரி ராம் தங்க நகை மாளிகை சார்பில் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் பிரிவிற்கு சாலை விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 பேரி கார்டுகளையும், போக்குவரத்து சிக்னல் லைட், பிரதிபலிப்பான் உடைகளையும் நிறுவனத்தின் சார்பில் பிரதிநிதிகள் ஓவியர் தேவ், துரை ஆகியோர் டி.எஸ்.பி., சுரேஷிடம் ஒப்படைத்தனர்.
டோல்கேட் பி.ஆர்.ஓ., தண்டபாணி, மேலாளர்கள் அசோக்குமார், மனோஜ் குமார், சொர்ணமணி, கணக்கு அலுவலர் சுடலைமுத்து, தொழில்நுட்ப பிரிவு சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.