/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை: கலெக்டர் ஆய்வு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை: கலெக்டர் ஆய்வு
ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை: கலெக்டர் ஆய்வு
ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை: கலெக்டர் ஆய்வு
ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 16, 2024 10:30 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட பரிசோதனையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலில் பயன்படுத்த 275 ஓட்டுச்சாவடிகளுக்கு பயன்படுத்த கூடுதல் ஓட்டுப்பதிவு இயந் திரங்கள் என மொத்தம் 575 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதி தேர்தல் அலுவலகத்திற்கு கொண்டு வந்து ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டிருந்தது.
ஓட்டுப் பதிவிற்கு முன் இயந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளதா என முதல் கட்ட பரிசோதனையை நேற்று பெல் நிறுவன பொறியாளர்கள் சோதனை செய்தனர். இப்பணியை கலெக்டர் பழனி ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக தொகுதியில் டோல் பிளாசா, ராதாபுரம், தென்னமாதேவி ஆகிய இடங்களில் நடைபெறும் வாகன சோதனையை ஆய்வு செய்தார். தாசில்தார் யுவராஜ், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.