ADDED : ஜூன் 16, 2024 10:31 PM
மயிலம் : மயிலம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார்.
மயிலம் அடுத்த கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி, 60; விவசாயி.
இவர், கூட்டேரிப்பட்டு வார சந்தையில் நேற்று காலை 8:45 மணியளவில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு மொபட்டில் கிராமத்திற்கு சென்றார்.
பாரத் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள கூட்ரோட்டில் திரும்பும் போது விழுப்புரத்திலிருந்து, சென்னை நோக்கிச் சென்ற சைலோ கார், மொபட் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ராமசாமி இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.