/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை அதிகாரி ஆய்வு அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை அதிகாரி ஆய்வு
அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை அதிகாரி ஆய்வு
அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை அதிகாரி ஆய்வு
அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை அதிகாரி ஆய்வு
ADDED : ஜூன் 28, 2024 11:25 PM

வானூர் : வானூர் அரசு விதைப் பண்ணையில் விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு நடப்பாண்டிற்கு முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாரம்பரிய உயிரி பூச்சிவிரட்டி பண்புடைய தாவரங்களான ஆடாதொடா, நொச்சி போன்ற நடவு கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக வானூர், காகுப்பம் மற்றும் இருவேல்பட்டு ஆகிய விதைப்பண்ணைகளில் மொத்தம் 1,36,500 நடவு கன்றுகள் வேளாண்மைத் துறை மூலம் உற்பத்தி செய்து, இந்த திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு விலை இல்லாமல் வழங்கப்பட உள்ளது.
வானூர் அரசு விதைப்பண்ணையில் உள்ள ஆடா தொடா, நொச்சி நடவுக் கன்றுகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, வானூர் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், வானூர் அரசு விதைப்பண்ணை வேளாண்மை அலுவலர் சவுந்தர்ராஜன், உதவி வேளாண்மை அலுவலர் யமுனா ஆகியோர் உடனிருந்தனர்.