/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கான தேர்வு விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கான தேர்வு
விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கான தேர்வு
விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கான தேர்வு
விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கான தேர்வு
ADDED : ஜூன் 28, 2024 11:26 PM
விழுப்புரம் : தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலை., மூலம், நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறைக்கான TNMAWS 2024 எழுத்து தேர்வுகள் இன்று 29ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் காகுப்பம் அண்ணா பல்கலை., பொறியியல் கல்லூரி, விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி ஆகிய 3 இடங்களில் இத்தேர்வு நடக்கிறது.
இதற்காக, விழுப்புரத்திலிருந்து அரசு பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை, விழுப்புரம் அண்ணா பல்கலை., கல்லூரி முதல்வரான தேர்வு ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.
இந்த 3 மையங்களிலும் 29ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், 30ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் இந்த எழுத்து தேர்வு நடப்பதாக, விழுப்புரம் அண்ணா பல்கலை., பொறியியல் கல்லூரி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.