/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வானுார் அரசு கல்லுாரி கட்டடம் திறப்பு விழா வானுார் அரசு கல்லுாரி கட்டடம் திறப்பு விழா
வானுார் அரசு கல்லுாரி கட்டடம் திறப்பு விழா
வானுார் அரசு கல்லுாரி கட்டடம் திறப்பு விழா
வானுார் அரசு கல்லுாரி கட்டடம் திறப்பு விழா
ADDED : ஜூலை 19, 2024 04:02 PM

வானுார், ஜூலை 20-
திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் 11 கோடியே 33 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கட்டடம் திறப்பு விழா நடந்தது.
வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த 2020ம் ஆண்டு துவங்கப்பட்டு, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இக்கல்லுாரிக்கு திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட மயிலம் ரோட்டில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.11 கோடியே 33 லட்சம் ரூபாயில் 3 தளங்களுடன் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் அமைச்சர் பொன்முடி புதிய கட்டத்தை திறந்து வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், வேலுார் மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் மலர், வேலுார் கல்விக்கோட்ட செயற்பொறியாளர் செல்வகுமார், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் சமூக வாரிய உறுப்பினர் சிவா.
ஒன்றிய சேர்மன் உஷா முரளி, துணை சேர்மன் பருவ கீர்த்தனா விநாயகமூர்த்தி, ஊராட்சி தலைவர் வெங்கடேசன், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) வில்லியம், மாவட்ட கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.