ADDED : ஜூலை 19, 2024 05:27 PM

மயிலம்: மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது.
திட்டத்தை சிவக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமதாஸ் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் குட்டி பாபு வரவேற்றார். ஊராட்சி தலைவர் அருணா திவாகர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.