Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தானால் தி.மு.க., ஆட்சி கலைக்கப்படும்: பா.ம.க., அன்புமணி எச்சரிக்கை

69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தானால் தி.மு.க., ஆட்சி கலைக்கப்படும்: பா.ம.க., அன்புமணி எச்சரிக்கை

69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தானால் தி.மு.க., ஆட்சி கலைக்கப்படும்: பா.ம.க., அன்புமணி எச்சரிக்கை

69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தானால் தி.மு.க., ஆட்சி கலைக்கப்படும்: பா.ம.க., அன்புமணி எச்சரிக்கை

ADDED : ஜூலை 05, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி : தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால், தி.மு.க., ஆட்சி கலைக்கப்படும் என பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து நேற்று மாலை பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் மணி வரவேற்றார்.

த.மா.கா., தலைவர் வாசன்:


மகளிர் உரிமை தொகையை காலையில் கொடுத்து மாலையில் டாஸ்மாக் மூலம் கஜானாவுக்கு கொண்டு செல்லும் திறமையான திராவிட மாடல் ஆட்சியாக தி.மு.க., உள்ளது என்றார்.

அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன்:

இந்த இடைத் தேர்தல் மக்கள் விரோத தி.மு.க.,விற்கும், மக்கள் நலனில் அக்கறை உள்ள கூட்டணிக்கான தேர்தல் என்றார்.

முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம்:


அனைத்து நிலைகளிலும் இந்த ஆட்சி தோல்வி அடைந்துள்ளது. காட்டாட்சி தர்பார் நடந்து கொண்டுள்ளது. இது கள்ளச்சாராய ஆட்சி. போதைப் பொருள் மண்டலமாக தமிழ்நாடு உள்ளது. 2026 தேர்தலின் அஸ்திவாரமாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

பா.ஜ., தலைவர்அண்ணாமலை:


இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கை முடிவை 14 ஆண்டிற்கு பின் மாற்றிக்கொண்டு தேர்தலுக்கு வர காரணம் , ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயத்தால் 65 பேர் இறந்துள்ளனர். 84 பேர் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளனர். கள் குடித்த குரங்கு போன்று தி.மு.க., ஆட்சி நடத்தி வருகிறது. எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் போல, விக்கிரவாண்டி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முன்னுதாரணமாக அமையும் என்றார்.

பா.ம.க., தலைவர்அன்புமணி:


தமிழக மக்களுக்கு சமூக நீதியை கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெ., 69 சதவீத இடஒதுக்கீட்டை 9வது அட்டவணையில் கொண்டு வந்தார். சமூக நீதியைப் பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.

கடந்த 2021ல் நடந்த மராத்தா இட ஒதுக்கீடு வழக்கு முடிந்துள்ளது. அடுத்து உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் வழக்கை விசாரிக்க உள்ளனர். சரியான தரவுகளை நீதிமன்றத்தில் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் .அப்படி இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் தி.மு.க., ஆட்சி கலைக்கப்படும். இந்த தேர்தலில் நமது வேட்பாளர் அன்புமணி 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

இவ்வாறு மாநில தலைவர் அன்புமணி பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us