ADDED : ஜூன் 20, 2024 03:36 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே நெல் அறுவடை செய்யப்பட்ட வைக்கோலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
விழுப்புரத்தை சுற்றி ஆனாங்கூர், பில்லுார், காவணிப்பாக்கம், திருப்பச்சாவடிமேடு, மரகதபுரம், பிடாகம் உள்பட பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில், ஆனாங்கூர், பில்லுார் கிராமங்களில் தற்போது குறுவை சாகுபடியான நெல் அறுவடை முடிந்துள்ளது.
இப்பகுதி நிலங்களில் உள்ள வைக்கோலுக்கு கடலுார், கள்ளக்குறிச்சி உட்பட பல மாவட்டங்களில் கிராக்கி அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் கால்நடைகளை வளர்ப்போர் அதிகமாக இங்கு வந்து வைக்கோல் வாங்கி செல்கின்றனர்.
ஆனாங்கூர், பில்லுார் கிராமங்களில் ஒரு வைக்கோல் கட்டு ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையொட்டி, வைக்கோல்களை கட்டு, கட்டாக வாகனங்களில் ஏற்றப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
குறுவை சாகுபடியில் லாபம் ஈட்டியதை அடுத்து, வைக்கோல் மூலமும் வருவாய் கிடைப்பதால், இங்குள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.