/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கிளியனுார் அம்பேத்கர் நகர் சந்திப்பில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு கிளியனுார் அம்பேத்கர் நகர் சந்திப்பில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு
கிளியனுார் அம்பேத்கர் நகர் சந்திப்பில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு
கிளியனுார் அம்பேத்கர் நகர் சந்திப்பில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு
கிளியனுார் அம்பேத்கர் நகர் சந்திப்பில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 20, 2024 03:35 AM

வானுார் : கிளியனுார் அம்பேத்கர் நகர் சந்திப்பில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கிளியனுார் மெயின் ரோட்டில் ஏராளமான குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. இது மட்டுமின்றி இந்த சாலையில் வணிக நிறுவனங்கள், கடைகளும் அமைந்துள்ளன. இவ்வழியாக அதிகளவில் பஸ், கனரக வாகனங்கள் செல்கின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் அம்பேத்கர் நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள் தினசரி கிளியனுார் மெயின் ரோட்டில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஒவ்வொரு பகுதிகளிலும் குவிந்து கிடக்கும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இதற்காக துப்புரவு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அம்பேத்கர் நகர் சந்திப்பு பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை யாரும் வாருவது கிடையாது. இதனால் அப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள், சாணங்கள், அழுகிய காய்கறிகள், கட்டுமானப்பொருட்கள் என மலை போல் குவிந்து கிடப்பதோடு, துார்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை குப்பைகளை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.