ADDED : ஜூன் 16, 2024 10:28 PM
வானுார் : கிளியனுார் அருகே லாரியில் குட்கா கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் நேற்று தென் கோடிப்பாக்கம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், குட்கா பொருட்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த நவரத்தின வேலு, 45; என்பதும், கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார், குட்காவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.