/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஸ்ரீரங்கபூபதி பள்ளியில் பட்டமளிப்பு விழா ஸ்ரீரங்கபூபதி பள்ளியில் பட்டமளிப்பு விழா
ஸ்ரீரங்கபூபதி பள்ளியில் பட்டமளிப்பு விழா
ஸ்ரீரங்கபூபதி பள்ளியில் பட்டமளிப்பு விழா
ஸ்ரீரங்கபூபதி பள்ளியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 12, 2025 07:46 AM

செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழைலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார்.
இயக்குனர்கள் சாந்தி பூபதி, சரண்யா ஸ்ரீபதி குத்துவிளக்கேற்றினர். சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ரபியா பேகம் வரவேற்றார்.
பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் மழலையர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். பி.ஆர்.ஓ., ரத்னா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மெட்ரிக் பள்ளி முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.