/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பைக் மீது அரசு விரைவு பஸ் மோதி விபத்து பைக் மீது அரசு விரைவு பஸ் மோதி விபத்து
பைக் மீது அரசு விரைவு பஸ் மோதி விபத்து
பைக் மீது அரசு விரைவு பஸ் மோதி விபத்து
பைக் மீது அரசு விரைவு பஸ் மோதி விபத்து
ADDED : ஜூன் 24, 2024 05:27 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே அரசு விரைவு பஸ், பைக் மற்றும் சென்டர் மீடியனில் மோதி, விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனையில் நேற்று இரவு 7:30 மணியளவில் விழுப்புரத்தைச் சேர்ந்த வெங்கன், 50; என்பவர் தனது ஸ்பிளண்டர் பைக்கில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பஸ், பைக் மீது மோதி நிலை தடுமாறி சென்டர் மீடியனில் உள்ள மின் விளக்கு கம்பத்தில் மோதியது.
இதில், படுகாயமடைந்த வெங்கன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக பஸ் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து காரணமாக சென்னை திருச்சி சாலையில் போக்குவரத்து பாதித்தது. விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.