ADDED : ஜூன் 26, 2024 11:00 PM
விழுப்புரம்: திண்டிவனம் அருகே காரில் வந்த மர்ம நபர்கள் 6 செம்மறி ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.
திண்டிவனம் அடுத்த நல்லாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். ஆவணிப்பூர் சாலையில் உள்ள இவரது வீட்டில், செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை மெயின்ரோடு வழியாக டோயாட்டா எட்டியாஸ் கிரே கலர் காரில் வந்த மர்ம நபர்கள், வீட்டில் கட்டியிருந்த 6 செம்மறி ஆடுகளை திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து பெருமாள் கொடுத்துள்ள புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.