/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நண்பர்கள் லயன்ஸ் சங்க சேவை பணியேற்பு விழா நண்பர்கள் லயன்ஸ் சங்க சேவை பணியேற்பு விழா
நண்பர்கள் லயன்ஸ் சங்க சேவை பணியேற்பு விழா
நண்பர்கள் லயன்ஸ் சங்க சேவை பணியேற்பு விழா
நண்பர்கள் லயன்ஸ் சங்க சேவை பணியேற்பு விழா
ADDED : ஜூலை 02, 2024 11:25 PM

திண்டிவனம், :திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் சங்கத்தின் 15ம் ஆண்டு சேவை பணியேற்பு விழா நடந்தது.
விழாவிற்கு, அருண் விஜி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காமராஜர் வரவேற்றார். சங்க நிர்வாகிகளை சேவை பணியில் அமர்த்தி, மாவட்ட துணை ஆளுநர் ராஜா சுப்ரமணியம் வாழ்த்தினார்.
மாவட்ட முன்னாள் ஆளுநர் அசோக்குமார் சோர்டியா, முன்னால் மாவட்ட ஆளுநர்கள் ராஜன், தணிகாசலம் ஆகியோர் புதிய உறுப்பினர்களை வாழ்த்தி பேசினர்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன், தலைமைப் பண்பு ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் ஆகியோர் சேவை திட்டத்தை துவக்கி வைத்து பேசினர்.
மண்டல தலைவர் வடிவேலு, வட்டார தலைவர் சங்கரநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சேவை திட்டங்களான கல்வி உதவித்தொகை, முதியோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.