/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உணவு பாதுகாப்பு துறை ரெய்டு மாவட்ட வியாபாரிகள் 'புலம்பல்' உணவு பாதுகாப்பு துறை ரெய்டு மாவட்ட வியாபாரிகள் 'புலம்பல்'
உணவு பாதுகாப்பு துறை ரெய்டு மாவட்ட வியாபாரிகள் 'புலம்பல்'
உணவு பாதுகாப்பு துறை ரெய்டு மாவட்ட வியாபாரிகள் 'புலம்பல்'
உணவு பாதுகாப்பு துறை ரெய்டு மாவட்ட வியாபாரிகள் 'புலம்பல்'
ADDED : ஜூன் 11, 2024 06:51 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் ரெய்டில் தொய்வு ஏற்பட்டதால் வியாபாரிகளிடம் சிலர் பணம் கறக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உணவு தயாரிக்கும் அனைத்து வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் உள்ள பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வதற்காக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்துறை அலுவலர்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தருணங்களில் மட்டும் உணவு தயாரிக்கும் நிறுவனங்களில் தங்களின் ஆய்வை மேற்கொள்கின்றனர். மேலும், உணவு தயாரிப்பு நிறுவனங்களில் பொதுமக்கள் ஏதாவது புகாரை வாட்ஸ் ஆப் மூலம் குழுக்களுக்கு பகிர்ந்தால், உயர் அதிகாரிகளுக்கு தெரிவதற்குள் சென்று அதன் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். மற்ற நேரங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரெய்டுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர்.
இதை பயன்படுத்தி கொண்டு, ஒரு சிலர், பைபாஸ் சாலையோர ஓட்டல்களில் சாப்பிடுவது போல சென்று, உணவையும் சாப்பிட்டு விட்டு அதில் குறைகள் கூறுவதோடு, சாப்பிட்ட பில் தராமல், அங்கிருந்து ஒரு தொகையை வசூல் செய்து விட்டு செல்வதாக, உணவகங்கள் வைத்துள்ள வியாபாரிகள் தரப்பில் புலம்புகின்றனர்.
இந்த புகார் சம்பந்தமாக, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், பணம் பறிப்போரின் ஆதிக்கம் ஓட்டல்களில் தலைதுாக்கியுள்ளதால் வியாபாரிகள் பிழைப்பு நடத்த முடியாமல் தவிக்கின்றனர்.