/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தேர்தல் நடத்தை விதிகள் அமல் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்' தேர்தல் நடத்தை விதிகள் அமல் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்'
தேர்தல் நடத்தை விதிகள் அமல் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்'
தேர்தல் நடத்தை விதிகள் அமல் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்'
தேர்தல் நடத்தை விதிகள் அமல் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு 'சீல்'
ADDED : ஜூன் 11, 2024 06:50 AM

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை யொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
இதையொட்டி நேற்று மாலை 4.30 மணிக்கு, தேர்தல் பிரிவில் உள்ள வருவாய் துறை அலுவலர்கள், விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் அருகேவுள்ள விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.
லோக்சபா தொகுதி தேர்தல் முடிவடைந்து கடந்த ௪ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், இடைத்தேர்தலை யொட்டி, மீண்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.