ADDED : ஜூன் 24, 2024 06:13 AM

விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
விழா கடந்த 21ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவர் திரவுபதி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்து வந்தது.
முக்கிய விழாவான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி மாலை மாலை 5:00 மணிக்கு, அக்னி கரகம் புறப்பாட்டுடன் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேரத்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.