/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஏரி, குளங்களில் இலவச வண்டல், மண் எடுப்பதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் ஏரி, குளங்களில் இலவச வண்டல், மண் எடுப்பதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ஏரி, குளங்களில் இலவச வண்டல், மண் எடுப்பதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ஏரி, குளங்களில் இலவச வண்டல், மண் எடுப்பதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ஏரி, குளங்களில் இலவச வண்டல், மண் எடுப்பதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 18, 2024 04:01 AM
விழுப்புரம், | : விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், ஏரி, குளங்களில் இலவச வண்டல், களிமண் எடுப்பதற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களை செம்மைபடுத்தவும் மற்றும் மண்பாண்டம் செய்யும் பயன்பாட்டிற்காகவும், தங்களது கிராமம் அருகே அமைந்துள்ள ஏரிகள், குளங்களில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து பயன்படுத்திக்கொள்ளவும், ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகரித்து கொள்ளவும், தமிழக அரசால் இலவசமாக வண்டல் மண், களிமண் வழங்குகிறது.
இதற்காக, தகுதிவாய்ந்த 709 நீர்நிலைகளின் விவரம், அதில் அதிகபட்ச எடுக்க கனிமத்தின் அளவு குறித்து நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக, விவரங்கள் பெறப்பட்டு, விழுப்புரம் மாவட்ட அரசிதழில் 16ம் தேதி பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விவசாயிகளுக்கு, நன்செய் நிலம் ஏக்கர் ஒன்றுக்கு 75 கனமீட்டர் (25 டிராக்டர் லோடுகள்) புன்செய் நிலம் ஏக்கர் ஒன்றுக்கு : 90 கனமீட்டர் (30 டிராக்டர் லோடுகள்) வீட்டு உபயோகத்திற்கு, 30 கனமீட்டர் (10 டிராக்டர் லோடுகள்) மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு 60 கனமீட்டர் (20 டிராக்டர் லோடுகள்) என்ற அளவிற்கு, வண்டல் மண் களிமண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
விவசாய நிலங்களுக்கு, 2 ஆண்டுக்கு ஒருமுறை விலையில்லாமல் மண்ணை பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், தங்களின் உபயோகத்திற்கு ஏற்றார்போல் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று, இணையவழியில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், தங்களுக்கு சொந்தமான நிலத்தின் விபரங்களை குறிப்பிட்டும், களிமண் தேவைப்படும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களது விபரங்களுடனும் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தாசில்தாருக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளலாம் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.