/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு
பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு
பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு
பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 28, 2024 04:55 AM
விழுப்புரம், : குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
பிறப்பு சான்றிதழ் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றிதழ் ஆகும்.
குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், விசா உரிமம் மற்றும் வெளிநாட்டில் குடியுரிமை பெற பிறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாக உள்ளது.
குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்தால் அந்த குழந்தை பிறந்த நாளில் இருந்த 12 மாதங்களுக்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து மூலம் உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் வழங்கி எவ்வித கட்டணமின்றி பெயரை பதியலாம்.
ஓராண்டிற்கு பின் 15 ஆண்டிற்குள் ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி பதியலாம்.
இந்த பிறப்பு சான்றிதழ் கடந்த 2000ம் ஆண்டு ஜன., 1ம் தேதிக்கு முன் பதிந்த பிறப்புகளுக்கும், இதற்கு பின் பதிந்து, 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளிலும் பெயர் சேர்க்க வரும் டிச., 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பெயரின்றி பிறப்பு பதிவு செய்துள்ள நிலையில் தொடர்புடைய நகராட்சி அல்லது தாசில்தார் மற்றும் பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களோடு (கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.
இந்த கால அவகாச நீட்டிப்பை பயன்படுத்தி, பெயரோடு கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.