/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கலெக்டர் அலுவலகத்தில் கலால் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலால் ஆய்வு கூட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் கலால் ஆய்வு கூட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் கலால் ஆய்வு கூட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் கலால் ஆய்வு கூட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:14 PM

விழுப்புரம் : கள்ளச்சாராயம், போதைப் பொருள் மற்றும் தடை செய்த புகையிலைப் பொருட்களைத் தடுப்பது தொடர்பான வாராந்திர கலால் ஆய்வு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:
மரக்காணம் அருகே முருக்கேரி கிராமத்தில் பகல், இரவு நேரங்களில் புதுச்சேரி பாக்கெட் சாராயம் விற்பதாக மக்களிடம் இருந்து வந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க, மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி.,க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலெக்டருக்கு, வாட்ஸ் ஆப் மூலம் வந்த 8 புகார்களுக்கும், கலெக்டர் அலுவலக கலால் பிரிவிற்கு தொலைபேசி மூலம் வந்த 9 புகார்களுக்கு அறிக்கை அளிக்க மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம், போதைப் பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க செய்ய மக்கள் ஒத்துழைப்பு அவசியமாகும். சென்னை மத்திய புலனாய்வு பிரிவுக்கு 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 9498410581 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், கலெக்டர் அலுவலக கலால் பிரிவுக்கு 04146 225431 தொலைபேசி எண்ணிலும், மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.
எஸ்.பி., தீபக் சிவாச், உதவி ஆணையர் (கலால்) முருகேசன், ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல்அமீது உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.