/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி வரும் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி வரும் 1ம் தேதி ஆர்ப்பாட்டம்
ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி வரும் 1ம் தேதி ஆர்ப்பாட்டம்
ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி வரும் 1ம் தேதி ஆர்ப்பாட்டம்
ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி வரும் 1ம் தேதி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:13 PM

கண்டமங்கலம் : கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்கக்கோரி வரும் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஏழுமலை, சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினர்.
அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., - வி.சி., - மா.கம்யூ., - இந்திய கம்யூ., - ம.தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் தோண்டப்பட்டுள்ள சர்வீஸ் சாலை மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 வழிச்சாலையை கடந்து செல்ல பள்ளிக்கு எதிரே இரும்பினாலான நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும்.
பள்ளிக்கு எதிரே ஒரு ஆண்டிற்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள 500 மீட்டர் நீள சர்வீஸ் சாலையை விரைவாக முடிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 1ம் தேதி கண்டமங்கலம் பழைய காவல் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.