/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தேர்தல் பணிக்குழு மா.கம்யூ., அமைப்பு தேர்தல் பணிக்குழு மா.கம்யூ., அமைப்பு
தேர்தல் பணிக்குழு மா.கம்யூ., அமைப்பு
தேர்தல் பணிக்குழு மா.கம்யூ., அமைப்பு
தேர்தல் பணிக்குழு மா.கம்யூ., அமைப்பு
ADDED : ஜூன் 20, 2024 03:41 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் மா.கம்யூ., மாவட்டக்குழு சார்பில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கலந்துகொண்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில், போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற செய்ய வேண்டிய பிரசார வழிகள் குறித்து பேசினார்.
மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் குமார், ராதாகிருஷ்ணன், முத்துக்குமரன், சங்கரன், மூர்த்தி, கீதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தேர்தல் பணிக்கு 55 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டது.
மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டங்கள், விக்கிரவாண்டி, காணை ஆகிய இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது.