Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தி.மு.க.,வில் தேர்தல் பணிக்குழு நியமனம் விறுவிறுப்பாகும் இடைத்தேர்தல் களம்

தி.மு.க.,வில் தேர்தல் பணிக்குழு நியமனம் விறுவிறுப்பாகும் இடைத்தேர்தல் களம்

தி.மு.க.,வில் தேர்தல் பணிக்குழு நியமனம் விறுவிறுப்பாகும் இடைத்தேர்தல் களம்

தி.மு.க.,வில் தேர்தல் பணிக்குழு நியமனம் விறுவிறுப்பாகும் இடைத்தேர்தல் களம்

ADDED : ஜூன் 14, 2024 06:50 AM


Google News
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க., வேட்பாளர் அறிவித்தவுடன் தொகுதிக்கு தேர்தல் பணிக் குழுவை தலைமை நியமித்து பணியை துவங்கியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளராக சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தல் களத்தில் எதிரணியை விட கூடுதலாக ஓட்டுகள் பெறும் நோக்கத்தில் தொகுதியில் உள்ள 7 ஒன்றியங்களையும், ஒரு பேரூராட்சியை பிரித்து களத்தில் பணியாற்ற தேர்தல் பணிக்குழுவை கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சர், பொன்முடி, கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோரது தலைமையில் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் வேலு. மேற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய ஒன்றியத்திற்கு அமைச்சர் சிவசங்கர், காணை வடக்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் சக்கரபாணி.

தெற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் மகேஷ் மற்றும் லட்சுமணன் எம்.எல்.ஏ.,வும், மத்திய ஒன்றியத்திற்கு அமைச்சர் நேரு, கோலியனுார் மேற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் அன்பரசன். விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு அமைச்சர் கணேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் பணி குறித்த கட்சி செயல் வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று 14ம் தேதி காலை விக்கிரவாண்டியில் மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமையில் நடக்கிறது.

கூட்டத்தில், தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., க்கள் பங்கேற்று தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்க உள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணி ஆளுங்கட்சியினர் செயல்பாட்டால் விறுவிறுப்படைந்துள்ளது.

மஸ்தான் பெயர் 'மிஸ்ஸிங்'

தேர்தல் பணிக்குழுவில் 9 அமைச்சர்கள், ஒரு எம்.பி., மற்றும் ஒரு எம்.எல்.ஏ., பங்கேற்றுள்ளனர். மாவட்டத்தின் மற்றொரு அமைச்சரான மஸ்தான் பெயர் இடம் பெறவில்லை. அவர் சில தினங்களுக்கு முன் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us