/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம்
அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம்
அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம்
அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 14, 2024 06:50 AM
செஞ்சி: செஞ்சி அடுத்த சேர்விளாகம் கிராமத்தில் உள்ள பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 11ம் தேதி விநாயகர் பூஜையும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை கோ பூஜை மற்றும் விஷேச திரவிய ஹோமம் நடந்தது. 9.30 மணிக்கு கடம் புறப்பாடும் 10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.
தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் விழா குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.