ADDED : ஜூன் 19, 2024 11:10 PM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பெண்ணிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த காவணிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி மனைவி தீபா, 29; இவர், செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 12ம் தேதி தீபா வீட்டு முன், அருகே உள்ள வி.அரியலுார் பகுதியைச் சேர்ந்த சமையல் மாஸ்டரான கருணாநிதி மகன் விஷ்ணு, 22; என்பவர், மது போதையில் தீபாவை திட்டி, தாக்கியதோடு, அவர் மீது காலி மது பாட்டிலையும் வீசினார்.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விஷ்ணுவை கைது செய்தனர்.