/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாதிரி பள்ளியில் ஆசிரியர்கள் வர தாமதம்: மாணவர்கள் கடும் அவதி மாதிரி பள்ளியில் ஆசிரியர்கள் வர தாமதம்: மாணவர்கள் கடும் அவதி
மாதிரி பள்ளியில் ஆசிரியர்கள் வர தாமதம்: மாணவர்கள் கடும் அவதி
மாதிரி பள்ளியில் ஆசிரியர்கள் வர தாமதம்: மாணவர்கள் கடும் அவதி
மாதிரி பள்ளியில் ஆசிரியர்கள் வர தாமதம்: மாணவர்கள் கடும் அவதி
ADDED : ஜூன் 13, 2024 12:08 AM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர காலதாமதம் ஆனதால் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே நிற்கும் அவலம் நீடித்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலுார் ஒன்றியம் வேலுார் கிராமத்தில் மாதிரி பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 8:45 மணிக்கு மேலாகியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்கள் பாதுகாப்பு இல்லாமல் பள்ளிக்கு வெளியே உள்ள திருவெண்ணெய்நல்லுார் - உளுந்துார்பேட்டை பிரதான சாலை ஓரமாக சைக்கிளிலும் சில மாணவர்கள் சாலையின் குறுக்கே நடந்து சென்று வந்தனர். இத்தகைய செயல் பெற்றோர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாணவர்கள் நலன்கருதி பள்ளிக்கு வாட்ச்மேன் அமைத்து பள்ளியை அதிகாலையில் திறக்க வழிவகை செய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.