Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் 14ம் தேதி தி.மு.க., தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் 14ம் தேதி தி.மு.க., தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் 14ம் தேதி தி.மு.க., தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் 14ம் தேதி தி.மு.க., தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

ADDED : ஜூன் 13, 2024 12:00 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் தி.மு.க., தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 14ம் தேதி நடக்கிறது.

விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி அறிக்கை:

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், மாவட்ட பொறுப்பாளரான எனது தலைமையிலும், மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் அன்னியூர் சிவா உள்ளிட்ட மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறுகிறது.

கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றுகிறார். ஜூலை 10ம் தேதி நடைபெற்ற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிகள், ஜூன் 15ல் கோவையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில், விழுப்புரம் தெற்கு மாவட்டத்தினர் கலந்துகொள்வது குறித்து ஆலோசிக்கப்படும்.

இக்கூட்டத்தில், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us