ADDED : ஜூன் 03, 2024 06:37 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நலச் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, சங்க மாநிலத் தலைவர் கந்தவேல் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் நீலமேகம், மாநில பொருளாளர் ராஜராஜசோழன், செய்தி தொடர்பாளர் பன்னீர்செல்வம், மாநில மகளிர் அணி தலைவர் செல்வராணி, ஒருங்கிணைப்பாளர் குமார் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் அண்ணாதுரை, செயலாளர் ஆறுமுகம், கடலுார் மாவட்ட செயலாளர் முருகன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பேரழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாத ஊதியமாக ஊராட்சியில் வழங்கப்படும் 2,500 ரூபாயை ஊராட்சி ஒன்றிய அலுவலர் வழங்க வேண்டும். கடந்த 2022ம் ஆண்டு முதல் 2 ஆண்டு காலமாக ஊராட்சி தலைவர்களால் வழங்காமல் இருக்கும் மாத ஊதியத்தினை உடனடியாக வழங்க வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர்களை சந்தித்து மனு அளிப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.