/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தகராறில் ஆட்டோ டிரைவர் இறந்ததால் பரபரப்பு தகராறில் ஆட்டோ டிரைவர் இறந்ததால் பரபரப்பு
தகராறில் ஆட்டோ டிரைவர் இறந்ததால் பரபரப்பு
தகராறில் ஆட்டோ டிரைவர் இறந்ததால் பரபரப்பு
தகராறில் ஆட்டோ டிரைவர் இறந்ததால் பரபரப்பு
ADDED : ஜூன் 03, 2024 06:36 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், காணை அருகே ஆயந்துார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ர மணி மகன் விஜயகுமார், 36; ஆட்டோ டிரைவர்.
இவரது பெரியம்மாவின் மகன் சேகர், 40; இவர், அதே பகுதியை சேர்ந்த முருகன், 43; என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்து வந்த நிலையில், ரூ.5 ஆயிரம் பாக்கி இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 8:00 மணியளவில், ஆயந்துார் டீக்கடையில் முருகன் நின்றிருந்தபோது, அவரிடம், மதுபானம் அருந்த ரூ.500 கடனாக தரும்படி கேட்டுள்ளார்.
ரூ.5 ஆயிரம் பணம் தர வேண்டிய நிலையில், மேலும் பணம் தர முடியாது என முருகன் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த விஜயகுமார், சகோதரர் சேகருக்கு ஆதரவாக முருகனை தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், விஜயகுமாரை நெட்டி தள்ளினார். இதில் கீழே விழுந்த விஜயகுமாரை முகையூர் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்ததை உறுதி செய்தனர். தகவலறிந்த காணை போலீசார், முருகனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடன் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் இறந்த சம்பவம் காணை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.