ADDED : ஜூலை 22, 2024 11:56 PM
செஞ்சி, : வீரணாமூர் பாலமுருகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சி அடுத்த வீரணாமூர் கிராமத்தில் கந்தப்பர் மேட்டில் உள்ள பாலமுருகர் கோவிலில் விநாயகர், பாலமுருகர் மற்றும் நவகிரகங்களுக்கு திருப்பணிகள் செய்து ஜீர்னோதாரன மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது.
தொடர்ந்து கடம் புறப்பாடாகி 8:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும் நடந்தது.
தொடர்ந்து 9:00 மணிக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. திராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.