ADDED : ஜூலை 12, 2024 06:32 AM

விழுப்புரம்: பா.ஜ., மாநில தலைவரை கண்டித்து, விழுப்புரத்தில் மத்திய மாவட்ட காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் விஸ்வநாதன், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவர் சேகர், இளைஞர் காங்., தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மனித உரிமை துறை மாவட்ட தலைவர் வேலு, மகிளா காங்., மாநில செயலாளர் மகேஸ்வரி, வளவனுார் பேரூராட்சி தலைவர் நாகராஜ், இளைஞர் காங்., மாவட்ட பொது செயலாளர்கள் விஜயகுமார், ரவிக்குமார், நகர நிர்வாகிகள் விக்டோபாய், ராஜேஸ்வரி, சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை மீது அவதுாறு பரப்பும் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, காங்., நிர்வாகிகள், அண்ணாமலை உருவப்படத்தை தீயிட்டு எரிக்க முயன்ற போது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த விழுப்புரம் தாலுகா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.