ADDED : ஆக 02, 2024 11:32 PM

செஞ்சி : காங்., சார்பில் பா.ஜ., எம்.பி.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் சூரிய மூர்த்தி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கருணாகரன், வழக்கறிஞர் விஜயன், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், நகர தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், எதிர்கட்சி தலைவர் ராகுலை தரம் தாழ்த்தி பேசியதாக பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூரைக் கண்டித்து பேசினர்.
வட்டார தலைவர்கள் செல்வம், காத்தவராயன், இளவழகன், நிர்வாகிகள் சீனுவாசன், மண்ணாங்கட்டி, ராஜா, முனுசாமி, ஜான்பாஷா, கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வட்டார தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.